இறால் குழி ஆம்லெட்
இறால் குழி ஆம்லெட்
தேவையானவை:
இறால் 100 கிராம்
(சுத்தம் செய்தது)
முட்டை 3
சின்னவெங்காயம் 15
பச்சை மிளகாய் 6
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
இஞ்சிபூண்டு பேஸ்ட் அரை டீஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
சுத்தம் செய்த இறாலை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், இஞ்சிபூண்டு பேஸ்ட், உப்பு சிறிது சேர்த்து புரட்டி 10 நிமிடம் ஊற வைக்கவும். முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும். இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும். பிறகு, ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு ஊற வைத்துள்ள இறால் கலவையைச் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது நேரம் வதக்கினால், இறாலில் உள்ள நீர் பிரிந்து நன்றாக வெந்து வரும். இப்போது இறாலை முட்டைக்கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு தாளிப்புக் கரண்டி அல்லது ஆழமான குழிக்கரண்டியை அடுப்பில் வைத்து குழியில் எண்ணெய் விடவும். எண்ணெய் சூடானதும் கலக்கி வைத்துள்ள முட்டை, இறால் கலவையை குழியில் ஊற்றி அடுப்பைக் குறைத்து வேகவிடவும். பிறகு பணியார குச்சியால் ஆம்லேட்டை மறுபுறம் கவனமாக, திருப்பி விட்டு வேகவிடவும். விருப்பப்பட்டால், மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment