Saturday 24 September 2016

இறால் கீமா கோலா

இறால் கீமா கோலா

இறால் கீமா கோலா

 

தேவையானவை:

 

இறால்  200 கிராம் (சுத்தம் செய்தது)

 

கடலைப்பருப்பு  200 கிராம்

 

சின்னவெங்காயம்  100 கிராம் (ஒன்றிரண்டாக அரைக்கவும்)

 

பூண்டு  7 பல் (ஒன்றிரண்டாக தட்டியது)

 

சோம்பு  2 டீஸ்பூன்

 

இஞ்சிபூண்டு பேஸ்ட்  ஒரு டீஸ்பூன்

 

கரம் மசாலாத்தூள்  அரை டீஸ்பூன்

 

காய்ந்த மிளகாய்  4

 

கொத்தமல்லித்தழை  2 டீஸ்பூன்

 

மஞ்சள் தூள்  அரை டீஸ்பூன்

 

உப்பு  தேவையான அளவு

 

எண்ணெய்  பொரிக்கத் தேவையான அளவு

 

தேங்காய்துருவல்  10 டீஸ்பூன் (தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைக்கவும்)

 

செய்முறை:

 

கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, அதிலிருந்து ஒரு கைப்பிடி எடுத்துக் கொள்ளவும். இத்துடன் காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து முதலில் நன்றாக அரைத்து எடுத்து வைக்கவும். பிறகு மீதமுள்ள பருப்பை ஒன்றிரண்டாக கெட்டி பதத்தில் மிக்ஸியில் சேர்த்து அரைத்தெடுக்கவும். சுத்தம் செய்த இறாலை மஞ்சள்தூள், சிறிது உப்பு தண்ணீரில் 5 நிமிடம் வேகவிட்டு தண்ணீரை வடித்து ஆற விடவும். ஆறியதும் மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுத்துக் கொள்ளவும். இரண்டு பாகமாக அரைத்த பருப்புக் கலவை, சின்னவெங்காயம், பூண்டு பேஸ்ட், கரம் மசாலாத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, தேவையான அளவு உப்பு, தட்டிய இஞ்சிபூண்டு, அரைத்த தேங்காய் எல்லாம் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து உருட்டி, எண்ணெயில் பொரித்தெடுத்தால், இறால் கீமா கோலா ரெடி.

No comments:

Post a Comment