Saturday 24 September 2016

இறால் முருங்கைக்கீரைப் பொரியல்

இறால் முருங்கைக்கீரைப் பொரியல்

இறால் முருங்கைக்கீரைப் பொரியல்

 

தேவையானவை:

 

இறால்  100 கிராம் (சுத்தம் செய்தது)

 

முருங்கைக்கீரை  ஒரு கப்

 

சின்னவெங்காயம்  15 (நீளவாக்கில் நறுக்கவும்)

 

காய்ந்த மிளகாய்  2

 

எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்

 

தேங்காய்த்துருவல்  5 டீஸ்பூன்

 

உப்பு  தேவையான அளவு

 

மஞ்சள் தூள்  அரை டீஸ்பூன்

 

செய்முறை:

 

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், காய்ந்த மிளகாயைக் கிள்ளி போட்டுத் தாளித்து சின்னவெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் சுத்தம் செய்த இறால் சேர்த்து வதக்கும்போதே முருங்கைக்கீரையும் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, மஞ்சள் தூள் சேர்க்கவும். தேவையான அளவுக்கு தண்ணீர் தெளித்து, 10 நிமிடம் மூடி போட்டு மிதமான தீயில் வைக்கவும். இடையில் மூடியைத் திறந்து, இறால் கலவையை ஒரு முறை புரட்டி விடவும். பிறகு நன்கு வெந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கினால், இறால் கீரைப் பொரியல் தயார்.

குறிப்பு:

 

இறாலுடன் சுரைக்காய், கொத்தவரங்காய் சேர்த்தும் இதே போல செய்தால் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment