Saturday, 24 September 2016

மட்டன் தோசை

மட்டன் தோசை

மட்டன் தோசை

 

தேவையானவை:

 

தோசை மாவு  அரை கிலோ

 

எலும்பில்லாத மட்டன்  கால் கிலோ

 

முட்டை  5

 

இஞ்சிபூண்டு விழுது  ஒரு டீஸ்பூன்

 

மஞ்சள் தூள்  சிறிதளவு

 

உப்பு  தேவையான அளவு

 

மிளகுத்தூள்  ஒரு டீஸ்பூன்

 

சீரகத்தூள்  ஒரு டீஸ்பூன்

 

எண்ணெய்  தேவையான அளவு

 

செய்முறை:

 

மட்டனை கழுவி சுத்தம் செய்து மீடியம் சைஸில் நறுக்கிக்கொள்ளவும். இத்துடன் உப்பு, இஞ்சிபூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், தோசை மாவை ஊத்தப்பமாக ஊற்றவும். இதில் முட்டையை உடைத்து அடித்து ஊற்றி, வேகவைத்த மட்டன் தூண்டுகளை வைக்கவும். இதன் மேல் மிளகுத்தூள், சீரகத்தூள் தூவவும். பிறகு, எண்ணெய் ஊற்றி மூடிபோட்டு வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

No comments:

Post a Comment