Saturday, 24 September 2016

கோழி கீமா தோசை

கோழி கீமா தோசை

கோழி கீமா தோசை

 

தேவையானவை:

 

தோசை மாவு  அரை கிலோ

 

எலும்பில்லாத சிக்கன்  300 கிராம்

 

பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம்  50 கிராம்

 

இஞ்சி  ஒரு துண்டு

 

பச்சைமிளகாய்  ஒன்று

 

பூண்டு  5 பல்

 

எண்ணெய்   தேவையான அளவு

 

சோம்பு  கால் டீஸ்பூன்

 

மிளகுத்தூள்  அரை டீஸ்பூன்

 

சீரகத்தூள்  அரை டீஸ்பூன்

 

உப்பு  தேவையான அளவு

 

செய்முறை:

 

சிக்கனை சுத்தம் செய்து மீடியம் சைஸில் நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சின்னவெங்காயம், சிக்கன் சேர்த்து வதக்கவும். இத்துடன் சோம்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும். சிக்கன் நன்றாக வெந்த தண்ணீர் வற்றியதும் இறக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, காய்ந்ததும் தோசை ஊற்றி, வதக்கி வைத்துள்ள மசாலாவை அதன் நடுவில் வைத்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேக விடவும். இருபுறமும் வேகவைத்து இறக்கிப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment