ஜவ்வரிசி கார தோசை
ஜவ்வரிசி கார தோசை
தேவையானவை:
இட்லி அரிசி அரைக்கிலோ
உளுந்து 100 கிராம்
காய்ந்த மிளகாய் 5
உப்பு தேவையான அளவு
சோம்பு அரை டீஸ்பூன்
சீரகம் அரை டீஸ்பூன்
மிளகு ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2
பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு துண்டு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
ஜவ்வரிசியை 5 மணி நேரமும், அரிசி, உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியே ஊற வைத்துக்கொள்ளவும். ஊறவைத்தவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் இந்த மாவுடன் கலந்து சூடான தோசைக்கல்லில் ஊற்றி, எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேகவைத்துப் பரிமாறவும்.

No comments:
Post a Comment