Monday, 26 September 2016

கேரட் அல்வா

கேரட் அல்வா

கேரட் அல்வா

 

தேவையானவை:

 துருவிய கேரட் - 2 கப் (அரை கிலோ)

 நெய் - 3 டேபிள்ஸ்பூன்

 மில்க்மெய்ட் - அரை கப் (200 கிராம்)

 முந்திரி - 10

 கிஸ்மிஸ் (உலர் திராட்சை) - 10

 ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

 சர்க்கரை - 6 டேபிள்ஸ்பூன்

 பால் - 100 மில்லி

 

செய்முறை:

கேரட்டை தோல் சீவி நைசாகத் துருவிக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு உருகியதும் முந்திரி, கிஸ்மிஸ் (உலர் திராட்சை) சேர்த்து வறுத்தெடுத்துக் கொள்ளவும். இதே நெய்யில் கேரட்டைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். கேரட் நன்கு வதங்கி வேகும் வரை வதக்கவும். பிறகு மில்க்மெய்ட், பால், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். கேரட் நன்கு வெந்து சுருண்டு வரும் சமயம் நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் (உலர் திராட்சை) மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

No comments:

Post a Comment