Monday, 26 September 2016

பிரெட் டிரை குலோப்ஜாமூன்

பிரெட் டிரை குலோப்ஜாமூன்

பிரெட் டிரை குலோப்ஜாமூன்

 

தேவையானவை:

 பிரெட் ஸ்லைஸ் - 4

 பால் - 100 மில்லி

 சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்

 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

 

சுகர் சிரப்புக்கு:

 சர்க்கரை - அரை கப்

 தண்ணீர் - அரை கப்

 ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

 ரோஸ் எசென்ஸ் - கால் டீஸ்பூன்

 

செய்முறை:

பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை நீக்கி விட்டு, நடுவில் உள்ள பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். பிரெட்டை பாலில் நனைத்துப் பிழிந்துகொள்ளவும். பிழிந்த பிரெட்டை கட்டிகள் இல்லாமல், மிருதுவான மாவாகப் பிசைந்துகொள்ளவும். அழுத்திப் பிசையக்கூடாது. அழுத்திப் பிசைந்தால் குலோப்ஜாமூன் கட்டியாகி விடும். இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருட்டிய உருண்டைகளை எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்துக்கொள்ளவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பொரிக்கவும். இல்லையென்றால், குலோப்ஜாமூன் வெளியே கருகி விடும். உள்ளே வேகாது. சுகர் சிரப்புக்கு தேவையான சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர், ஏலக்காய்த்தூள், ரோஸ் எசென்ஸ் சேர்த்து பிசுக்கு பதம் வரும் வரை கொதிக்க விடவும். பொரித்து வைத்துள்ள குலோப்ஜாமூன்களை சர்க்கரைப் பாகில் போட்டு 2 மணி நேரம் ஊற விடவும். இரண்டு மணி நேரம் கழித்து, குலோப்ஜாமூன்களை வெளியே எடுத்து, சர்க்கரையில் புரட்டி வைக்கவும். இந்த குலோப்ஜாமூன்கள் இரண்டு நாட்கள் வரை கெடாது.

No comments:

Post a Comment