பால் பாயசம்
பால் பாயசம்
தேவையானவை:
பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
பால் - 4 கப்
சர்க்கரை - கால் கப்
குங்குமப்பூ - சிறிதளவு
முந்திரி - 10
கிஸ்மிஸ் (உலர் திராட்சை) - 10
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
செய்முறை:
வாணலியில் நெய் விட்டு முந்திரி, கிஸ்மிஸ் (உலர் திராட்சை) ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதே வாணலியில் அரிசியை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த அரிசியை பாலில் கலந்து ஒரு குக்கரிலோ அல்லது பாத்திரத்திலோ வேக வைத்துக் கொள்ளவும். அரிசி வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து, நன்றாகக் கரையும் வரை கிளறவும். பிறகு நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் (உலர்திராட்சை), ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கவும். அரிசியை வேக வைக்கும்போது அடுப்பைக் குறைத்து வைத்து வேக வைக்கவும்.

No comments:
Post a Comment