Monday, 26 September 2016

நெத்திலிக் கருவாடு வறுவல்

நெத்திலிக் கருவாடு வறுவல்

நெத்திலிக் கருவாடு வறுவல்

தேவையானவை:

 நெத்திலி மீன் கருவாடு - கால் கிலோ

 பெரிய வெங்காயம் - ஒன்று

 தக்காளி - ஒன்று

 கறிவேப்பிலை - சிறிதளவு

 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நெத்திலி மீன் கருவாட்டை அதன் தலைப்பகுதியை நீக்கி விட்டு வெந்நீரில் நன்கு அலசி எடுத்து தனியே வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் நிறம் மாற வதங்கியவுடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், சோம்புத்தூள் சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வைத்துள்ள நெத்திலிக் கருவாட்டினை சேர்க்கவும். தீயை மிதமாக்கி கருவாடு வெந்ததும் கிரேவி டிரையாகி கருவாட்டோடு சேரும் அளவுக்கு நன்கு வதக்கி இறக்கிப் பரிமாறவும்.A

No comments:

Post a Comment