ரேஸ் குழம்பு
ரேஸ் குழம்பு
தேவையானவை:
கத்திரிக்காய் - 4 (நறுக்கிக் கொள்ளவும்)
புளிக்கரைசல் - ஒரு கப்
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு,
உளுத்தம்பருப்பு, பயத்தம்பருப்பு - தலா ஒன்றரை டேபிள்ஸ்பூன்
மல்லி (தனியா) - 2 டேபிள்ஸ்பூன்
மிளகு - 5
காய்ந்த மிளகாய் - 3 (அல்லது காரத்துக்கேற்ப)
வெந்தயம் - அரை டீஸ்பூன்
பச்சரிசி - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2 (கீறி விடவும்)
மஞ்சள்தூள் - சிறிதளவு
கடுகு - ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெறும் வாணலியில் வெந்தயம், அரிசி இரண்டையும் வறுத்து தனியே வைக்கவும். பிறகு, ஒரு டேபிஸ்பூன் நல்லெண்ணெயை அதே வாணலியில் விட்டு பருப்பு வகைகள், மல்லி (தனியா), மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்து வைத்துக்கொள்ளவும். முதலில் அரிசி, வெந்தயத்தை மிக்ஸியில் அரைத்து, பிறகு வறுத்தவை எல்லாவற்றையும் சேர்த்து, நீர் விட்டு அரைக்கவும்.
அதே வாணலியில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி கடுகு தாளித்து, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, பிறகு கறிவேப்பிலை, நீளமாக நறுக்கிய கத்திரிக்காய் துண்டுகளைப் போட்டு வதக்கி, புளிக்கரைசல் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். கத்திரிக்காய் வெந்ததும் அரைத்து வைத்த விழுதைச் சேர்ந்து எல்லாமுமாகச் சேர்ந்து கொதித்ததும் இறக்கினால்... ரேஸ் குழம்பு ரெடி!
No comments:
Post a Comment