Thursday, 29 September 2016

இருபுளிக் குழம்பு

இருபுளிக் குழம்பு

இருபுளிக் குழம்பு

 

தேவையானவை:

 முருங்கைக்காய் - 2 (விரல் நீளத்துக்கு நறுக்கவும்)

 புளிக்கரைசல் - அரை கப்

 மோர் - ஒரு கப்

 தேங்காய்த் துருவல் - ஒரு கப்

 வெந்தயம் - கால் டீஸ்பூன்

 காய்ந்த மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப)

 பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன் (பத்து நிமிடம் ஊறவைக்கவும்)

 மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை

 கடுகு - ஒரு டீஸ்பூன்.

 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், வெந்தயத்தை வறுத்து... தேங்காய்த் துருவல், பச்சரிசியுடன் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் புளிக்கரைசலை ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, விரல் நீளத்துக்கு நறுக்கிய முருங்கைக்காயையும் சேர்க்கவும். காய் வெந்ததும் அரைத்து வைத்த விழுதைச் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் மோரை ஊற்றி, மீண்டும் ஒரு கொதி வந்ததும் கடுகு, பெருங்காயத்தை சிறிதளவு எண்ணெயில் தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

No comments:

Post a Comment