Thursday, 29 September 2016

தவல அடை

தவல அடை

தவல அடை

 

தேவையானவை:

 புழுங்கல் அரிசி, பச்சரிசி - தலா முக்கால் கப்

 துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன்

 காய்ந்த மிளகாய் (அரைக்க) - 3

 தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்

 பெருங்காயத்தூள் - சிட்டிகை,

 கடுகு - ஒரு டீஸ்பூன்

 காய்ந்த மிளகாய் (தாளிக்க) - 1

 கறிவேப்பிலை - தேவையான அளவு

 எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

புழுங்கல் அரிசி, பச்சரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தண்ணீர் விட்டுக் களைந்து, காய்ந்த மிளகாயையும் அதனுடன் சேர்த்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும், தண்ணீரை வடித்து உப்பு சேர்த்து கொரகொரப்பாக, கெட்டியாக அரைக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி, தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்கி, மாவில் போட்டுக் கலந்துவிடவும். தவாவில் எண்ணெய் தடவி, மாவை உருட்டி, கைகளால் வடைகளாகத் தட்டிப் போட்டு, ஓரங்களில் எண்ணெய்விட்டு, குழிவான தட்டு போட்டு மூடி, வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

No comments:

Post a Comment