Wednesday, 28 September 2016

மட்டன் எலும்புக் குழம்பு

மட்டன் எலும்புக் குழம்பு


மட்டன் எலும்புக் குழம்பு

 

தேவையானவை:

 மட்டன் எலும்பு - அரை கிலோ

 சின்ன வெங்காயம் - 100 கிராம் (இரண்டாக நறுக்கவும்)

 தக்காளி - 3 (மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும்)

 பச்சை மிளகாய் - 4 (இரண்டாக நறுக்கவும்)

 கறிவேப்பிலை - தேவையான அளவு

 மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

 இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்

 கசகசா- 1 டேபிள்ஸ்பூன்

 லவங்கப்பட்டை- 4

 கிராம்பு- 4

 மிளகு - அரை டேபிள்ஸ்பூன்

 ஏலக்காய் - 2

 சோம்பு - 1 டீஸ்பூன்

 தேங்காய்த்துருவல் - அரை மூடி

 உப்பு - தேவையான அளவு

 கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 

செய்முறை:

வாணலியில் எண்ணெய் இல்லாமல் தலா 2 லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, கசகசா, சோம்பு முழுவதும், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்து, மிக்ஸியில் பேஸ்டாக அரைத்து வைக்கவும். அதே  வாணலியில் எண்ணெய் ஊற்றி மீதம் இருக்கும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். இதில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போன வதக்கவும். இதில் மட்டன் எலும்புகளைப் போட்டு நன்கு வதக்கவும். தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். இத்துடன் அரைத்த கலவையைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அரை மணி நேரம் மீடியம் தீயில் மூடி போட்டு வேக வைக்கவும். இறக்கும் போது கொத்தமல்லித்தழைச் சேர்த்துப் பரிமாறவும்.

No comments:

Post a Comment