Wednesday, 28 September 2016

சேமியா பகளாபாத்

சேமியா பகளாபாத்

சேமியா பகளாபாத்

 

தேவையானவை:

 

 சேமியா - 200 கிராம்

 பால் - அரை லிட்டர்

 தயிர் - 100 மில்லி

 வெண்ணெய் - 25 கிராம்

 ஃப்ரெஷ் க்ரீம் - 50 மில்லி

 கேரட் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்

 கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்

 கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 இஞ்சி - சிறிய நெல்லிக்காய் அளவு

 பச்சைமிளகாய் - 1

 காய்ந்த மிளகாய் - 2

 கறிவேப்பிலை - சிறிதளவு

 நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 எண்ணெய் - 2 டீஸ்பூன்

 தண்ணீர், உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

பச்சைமிளகாய் மற்றும் இஞ்சியைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதித்ததும், சேமியா, 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேக விடவும். சேமியா அரைவேக்காடு வெந்ததும் தண்ணீரை வடிக்கவும். 

மற்றொரு பாத்திரத்தில் பால் சேர்த்துக் கொதித்ததும், வேகவைத்த சேமியாவைச் சேர்த்து, தீயைக் குறைத்து வைத்துக் கொதிக்க விடவும். பால் வற்றியதும், அடுப்பை அணைத்து உப்பு, வெண்ணெயைச் சேர்க்கவும். மற்றொரு வாணலியில் நெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, சேமியா கலவையில் சேர்க்கவும். சேமியா நன்கு ஆறியதும் ஃப்ரெஷ் க்ரீம், தயிர் சேர்த்துக் கலக்கி, மேலாக கேரட் துருவல் தூவி சூடாகப் பரிமாறலாம்.

No comments:

Post a Comment