Wednesday, 28 September 2016

பூந்தி ரைத்தா

பூந்தி ரைத்தா

பூந்தி ரைத்தா

 

தேவையானவை:

 

 கெட்டித் தயிர் - 250 மில்லி

 கடலை மாவு - 100 கிராம்

 சாட் மசாலா, கறுப்பு உப்பு - ஒரு சிட்டிகை

 சீரகத்தூள் - ஒரு சிட்டிகை

 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

 கொத்தமல்லித்தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)

 உப்பு - தேவையான அளவு

 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

 

செய்முறை:

 

கடலைமாவை உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தை விட கொஞ்சம் இலகுவாகக் கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பூந்திக் கரண்டியை எண்ணெயின் மேல் பிடித்துக் கொண்டு, கரண்டியில் கடலைமாவை ஊற்றவும். எண்ணெயில் மாவு விழுந்து மிதக்க ஆரம்பித்ததும் எடுத்தால் பூந்தி ரெடி.

 

ஒரு பவுலில் தயிர், கறுப்பு உப்பு, சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து, இறுதியாக பூந்தியையும் சேர்த்து நன்றாகக் கலக்க, சுவையான பூந்தி ரைத்தா தயார். ரைத்தாவின் மேல் சிறிது பூந்தியைத் தூவிப் பறிமாறவும்.

 

குறிப்பு:

 

கரண்டியில் மாவை ஊற்றும்போது கரண்டியைத் தட்டாமல் ஊற்ற வேண்டும். இல்லையென்றால், பூந்தி உருண்டையாக இல்லாமல் வேறு வேறு ஷேப்பில் வரும். கரண்டியில் மாவை ஊற்றும்போது அவை அடைத்துக் கொள்ளாமல் வழிந்து ஓட வேண்டும்.

No comments:

Post a Comment