செஷ்வான் வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ்
செஷ்வான் வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ்
தேவையானவை :
நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்றில் பாதி
கேரட் - ஒன்று
முட்டைகோஸ் - 10 கிராம்
குடமிளகாய் - ஒன்றில் பாதி
பசலைக்கீரை - 100 கிராம்
ஊறுகாயில் இருக்கும் கிரேவி -
2 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
வெந்த சாதம் - அரை கிலோ (பாஸ்மதி அரிசி)
வெங்காயத்தாள் - ஒரு டேபிள்ஸ்பூன்
தாளிக்க :
எண்ணெய் - 2 டீஸ்பூன்
இஞ்சி - அரை டீஸ்பூன்
பூண்டு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஒன்று
செய்முறை:
காய்கறிகளை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிக் கொள்ளுங்கள். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ், குடமிளகாய் மற்றும் பசலைக்கீரையைச் சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும். காய்கள் நன்கு வெந்ததும் ஊறுகாய், கிரேவி, சோயா சாஸ், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும். சாஸின் வாடை போன பிறகு மிளகுத்தூள், வெங்காயத்தாள் சேர்த்துக் கிளறி சூடான சாதத்தில் கலந்துப் பரிமாறவும்.
குறிப்பு:
செஷ்வான் சாஸ் சேர்த்து செய்வதற்கு பதில், அதே சுவையைப் பெற ஊறுகாய் கிரேவியை சேர்க்கிறோம்.

No comments:
Post a Comment