Sunday, 25 September 2016

கோழி மிக்ஸர்

கோழி மிக்ஸர்

கோழி மிக்ஸர்

 

தேவையானவை:

 எலும்பு இல்லாத சிக்கன் - அரை கிலோ

 கடலை மாவு - அரை டேபிள்ஸ்பூன்

 அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்

 கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

 இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்

 சீரகம் - ஒரு டீஸ்பூன்

 வேர்க்கடலை  - 2 டேபிள்ஸ்பூன் (பவுடராக்கிக் கொள்ளவும்)

 எண்ணெய் - தேவையான அளவு

 

தாளிக்க :

 கறிவேப்பிலை - சிறிதளவு

 எண்ணெய் - 2 டீஸ்பூன்

 பூண்டு - 6 பல்

 வறுத்த வேர்க்கடலை - 5

 முழு சின்ன வெங்காயம் - 5

 

செய்முறை:

சிக்கனை கழுவி சுத்தம் செய்து விருப்பமான வடிவில் நறுக்கிக் கொள்ளவும். மிளகுத்தூள், எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லா பொருட்களையும் சிக்கனுடன் சேர்த்து நன்கு பிசிறவும். சிக்கனில் இருக்கும் நீரே பிசிற போதுமானது. வேண்டுமென்றால், சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசிறி கொள்ளலாம். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கனைப் பொரித்து எடுக்கவும். மற்றொரு வாணலியில் தாளிக்க வேண்டியதைச் சேர்த்து தாளித்துபொரித்த சிக்கனில் கொட்டி மிளகுத்தூள் தூவிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment