Sunday, 25 September 2016

ஃபிஷ் ஃப்ரை

ஃபிஷ் ஃப்ரை

ஃபிஷ் ஃப்ரை

 

தேவையானவை:

 வஞ்சிரம் மீன்  - 4 துண்டு

 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

 மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

 எலுமிச்சைப் பழம் - ஒன்றில் பாதி

  (சாறு எடுக்கவும்)

 அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை:

வஞ்சிர மீன் எண்ணெய் தவிர்த்து, மற்ற எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்துக்குக் கலந்து கொள்ளவும். சுத்தம் செய்த மீன் துண்டுகளை இதில் சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, எண்ணெய் விட்டு மீனைச் சேர்த்து இருபுறமும் மிதமான தீயில் இரண்டு புறமும் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.

No comments:

Post a Comment