Thursday, 29 September 2016

சுருள் அப்பம்

சுருள் அப்பம்

சுருள் அப்பம்

 

தேவையானவை:

 மைதா மாவு - 2 கப்

 சர்க்கரை - அரை கப்

 தேங்காய்த் துருவல் - அரை கப்

 ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு சேர்த்து, தேவையான நீர் விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைத்து வைக்கவும். வேறு ஒரு பாத்திரத்தில் தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து வைக்கவும். ஒரு தவாவில் கரைத்த மாவை மெல்லியதாக தோசை போல் ஊற்றி, ஓரங்களில் நல்லெண்ணெய் சேர்த்து வேகவிட்டு, நடுவில் 2 ஸ்பூன் தேங்காய்க் கலவையை வைத்துச் சுருட்டவும்.

இந்த சுருள் அப்பத்தை, செய்வது மிகவும் எளிது... சுவையோ ஆளை அசத்தும்!

No comments:

Post a Comment