Thursday, 29 September 2016

பால் கூட்டு

பால் கூட்டு

பால் கூட்டு

 

தேவையானவை:

 பரங்கிக்காய்த் துண்டுகள் - ஒரு கப்

 தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

 பச்சை மிளகாய் - 2

 சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்

 அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

 உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

தேங்காய்த் துருவல், பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி, உப்பு போட்டு நறுக்கியபரங்கிக்காய்த் துண்டுகளைச் சேர்த்து வேகவிடவும். பரங்கிக்காய் வெந்ததும் அரைத்து வைத்த தேங்காய் விழுதைச் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் சர்க்கரை சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும் அரிசி மாவில் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டுக் கரைத்துச் சேர்க்கவும். உளுத்தம்பருப்பை தேங்காய் எண்ணெயில் தாளித்து சேர்த்துக் கலந்தால்... பால் கூட்டு தயார்.

No comments:

Post a Comment