மஷ்ரூம் ஸ்டஃப்டு கேப்சிகம்
மஷ்ரூம் ஸ்டஃப்டு கேப்சிகம்
தேவையானவை:
மொட்டுக் காளான் - 200 கிராம்
குடமிளகாய் - 8
பெரிய வெங்காயம் - 100 கிராம்
மிளகுத்தூள் - சிறிதளவு
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - 3 பல்
பச்சைமிளகாய் - 3
சிவப்புமிளகாய் சாஸ் - சிறிதளவு
பச்சைமிளகாய் சாஸ் - சிறிதளவு
வெங்கயாத்தாள் - ஒரு கட்டு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
காளானை தண்ணீரில் சுத்தம் செய்துகொள்ளவும். காளான், வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாள் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குடமிளகாயில் உள்ள காம்பு பகுதியை நீக்கி விட்டு, உள்ளே இருப்பவற்றை அகற்றி விடவும். பிறகு, வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இத்துடன் காளானை சேர்த்து வதக்கவும். இதில் உப்பு, மிளகுத்தூளை சேர்த்து வதக்கிய பிறகு, சிவப்புமிளகாய் சாஸ், பச்சைமிளகாய் சாஸ் சேர்த்து நன்றாகக் கிளறவும். இத்துடன் நறுக்கிய வெங்காயத்தாளைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். கலவை ஆறியதும், விதைகள் நீக்கப்பட்ட குடமிளகாய்க்கு உள்ளே நிரப்பி, பேக்கிங் அவனில் 15 நிமிடங்களுக்கு, 150 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் வேகவிட்டு எடுத்து சூடாகப் பரிமாறவும்.
No comments:
Post a Comment