கார்லிக் மஷ்ரூம்
கார்லிக் மஷ்ரூம்
தேவையானவை:
மொட்டுக் காளான் - 200 கிராம்
மைதா மாவு - 150 கிராம்
சோயா சாஸ் - 10 மில்லி
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
குட மிளகாய் - ஒன்று
வெங்காயம் - 100 கிராம்
வெங்காயத்தாள் - ஒரு கட்டு
பச்சைமிளகாய் - 2
தக்காளி சாஸ் - சிறிதளவு
மிளகுத்தூள் - சிறிதளவு
முட்டை - ஒன்று
பச்சைமிளகாய் சாஸ் -10 மில்லி
செலரி - சிறிதளவு
லீக்ஸ் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
காளானை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். காளான், வெங்காயத்தாள், செலரி, லீக்ஸ் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கழுவிய காளானுடன் மைதா மாவு, சோயா சாஸ், முட்டை, சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கலக்கி எண்ணெயில் பக்கோடாவைப் போல, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, குடமிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, குடமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பின்னர் இத்துடன் பொரித்த காளான், சோயா சாஸ், தக்காளி சாஸ், பச்சைமிளகாய் சாஸ், சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், செலரி, லீக்ஸ் ஆகியவற்றைத் தூவிப் பரிமாறவும்.
குறிப்பு:
செலரி மற்றும் லீக்ஸ் ஆகியவை காய்கறி கடைகள், சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும்.

No comments:
Post a Comment