Tuesday, 27 September 2016

மஷ்ரூம் ஆகிராடின்

மஷ்ரூம் ஆகிராடின்

மஷ்ரூம் ஆகிராடின்

 

தேவையானவை:

 மொட்டுக் காளான் - 200 கிராம்

 வெண்ணெய் - 50 கிராம்

 மைதா மாவு - 40 கிராம்

 சீஸ் - இரண்டு ஸ்லைஸ்

 பால் - 500 மில்லி லிட்டர்

 மிளகுத்தூள் - 5 கிராம்

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

காளானை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து, ஒவ்வொன்றையும் நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சீஸை துருவிக் கொள்ளவும். காளானை சூடான தண்ணீரில் உப்பு சேர்த்து வேகவிட்டு எடுத்து தண்ணீரை வடிக்கவும். வாணலியில் பத்து கிராம் வெண்ணெய் சேர்த்து, வேக வைத்த காளான், உப்பு, மிளகுத்தூள் தூவி கிளறி இறக்கவும். பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மீதம் இருக்கும் வெண்ணெயைச் சேர்த்து சூடாக்கி, இத்துடன் மைதா மாவைச் சேர்த்து நிறம் மாறாமல் கிளறவும். இத்துடன் சூடான பால், தேவையான அளவு உப்பு சேர்த்து கட்டிகள் இல்லாமல் சில நிமிடங்கள் கிளறி இறக்கினால், வொயிட் சாஸ் ரெடி. அவனில் வைக்கக்கூடிய குழிவான பிளேட்டில் வதக்கிய காளான் கலவையை வைத்து, அதன் மேல் தயாராக வைத்திருக்கும் வொயிட் சாஸை ஊற்றவும். இதில் சீஸை தூவிவிடவும். அப்படியே பிளேட்டை அவனில் 5-10 நிமிடங்கள், 150 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில், சீஸ் உருகும் வரை வைத்திருந்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.

No comments:

Post a Comment