பிரெட் உப்புமா
பிரெட் உப்புமா
தேவையானவை:
பிரெட் - 4 அல்லது 5 ஸ்லைஸ்கள்
கேரட் - கால் கப்
பச்சைமிளகாய் - 2
குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி - ஒன்று
டொமேட்டோ சாஸ் - தேவையான அளவு
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - ஒன்று
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
கேரட்டைத் துருவி தனியே வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய், குடமிளகாய், தக்காளி மற்றும் கொத்தமல்லித்தழை இவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கி, தக்காளியைச் சேர்த்து கரைய வதக்கவும். இதில் பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, குடமிளகாய், கறிவேப்பிலை, துருவிய கேரட் என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் துண்டுகளாக்கப்பட்ட பிரெட் மற்றும் உப்பைச் சேர்த்து நன்கு புரட்டிக் கொள்ளவும். விருப்பமுள்ளவர்கள் டொமேட்டோ சாஸை இத்துடன் சேர்த்து புரட்டவும். சுவையான பிரெட் உப்புமா தயார்.

No comments:
Post a Comment