இட்லி ஃப்ரை
இட்லி ஃப்ரை
தேவையானவை:
இட்லி - 4 (ஆறியது)
பெரிய வெங்காயம் - ஒன்று
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை இவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இட்லிகளை உதிரியாக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழையைச் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் உப்பு, மஞ்சள்தூளைச் சேர்த்துக் கிளறவும். உதிரியாக்கிய இட்லிகளைச் சேர்த்து நன்கு வதக்கவும். சுவையான இட்லி ஃப்ரை ரெடி.
குறிப்பு:
சூடான இட்லியைத் தூளாக உதிர்க்க முடியாது. எனவே, இட்லி ஃப்ரை செய்ய இரவில் செய்து மீதமான இட்லியைப் பயன்படுத்தலாம் அல்லது சிறிது நேரம் சூடான இட்லியை ஃபிரிட்ஜில் வைத்து ஆறியதும் உதிரியாக்கலாம்.

No comments:
Post a Comment