Monday, 26 September 2016

ஸ்வீட் ஃகார்ன் பசலை பிரெட்

ஸ்வீட் ஃகார்ன் பசலை பிரெட்

ஸ்வீட் ஃகார்ன் பசலை பிரெட்

 

தேவையானவை:

 ஸ்வீட்ஃகார்ன் - அரை கப்

 பிரெட் ஸ்லைஸ்கள் - 4

 பசலைக்கீரை - அரை கப்

 பெரிய வெங்காயம் - அரை கப்

 வெண்ணெய் - 2 டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 மிளகுத்தூள் - தேவையான அளவு

 

செய்முறை:

பசலைக்கீரை மற்றும் வெங்காயத்தைக் கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஸ்வீட் கார்னை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் சேர்த்து உருக்கி வேக வைத்த ஸ்வீட் கார்னைச் சேர்த்து வதக்கவும். இத்துடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பசலைக்கீரையைச் சேர்த்து நிறம் மாற நன்கு வதக்கவும். இதில் போதுமான அளவு மிளகுத்தூள், உப்பைச் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும். பிரெட்டை விருப்பம் உள்ளவர்கள் டோஸ்ட் செய்துவிட்டு அதன் ஓரங்களை நீக்கிக் கொள்ளவும். விரும்பாதவர்கள் ஃப்ரெஷ் பிரெட்டை உபயோகிக்கவும். இனி பிரெட்டின் உள்ளே வதக்கிய கலவையை வைத்து மற்றொரு பிரெட்டால் மூடி சாண்ட்விச் போல சாப்பிடலாம். 

 

குறிப்பு:

நேரம் இல்லாதர்கள் இரவே ஸ்வீட் கார்னை வேக வைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். குக்கரில் வேக வைத்தால்தான் கார்ன் உப்பலாக இருக்கும்.

No comments:

Post a Comment