Saturday, 24 September 2016

பால் பாயசம்

பால் பாயசம்

பால் பாயசம்

 

தேவையானவை:

 

ஊற வைத்து, நிழலில் உலர்த்தி உடைத்த மூங்கில் அரிசி  5 டேபிள்ஸ்பூன்

 

பால்  ஒரு லிட்டர்

 

கண்டன்ஸ்டு மில்க்  4 டேபிள்ஸ்பூன்

 

சர்க்கரை  கால் கப்

 

ஏலக்காய்த்தூள்  கால் டீஸ்பூன்

 

முந்திரி, பாதாம்  தேவையான அளவு

 

செய்முறை:

 

ஒரு பாத்திரத்தில் மூங்கில் அரிசியைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி, 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து மிக்ஸியில் சேர்த்து ரவை போல் உடைத்துக் கொள்ளவும். பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் உடைத்த அரிசியைச் சேர்த்து வேகவிடவும். விருப்பப்படுகிறவர்கள் குக்கரில் சேர்த்து 4 விசில் விட்டு வேகவிடவும். இத்துடன் சர்க்கரை, கண்டன்ஸ்டு மில்க், ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். நறுக்கிய முந்திரி, பாதாம் சேர்த்துக் கலக்கி சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறவும்.

No comments:

Post a Comment