Saturday, 24 September 2016

பேரீச்சம் பழ பிர்னி

பேரீச்சம் பழ பிர்னி

பேரீச்சம் பழ பிர்னி

 

தேவையானவை:

 

ஊற வைத்து உடைத்த

 

மூங்கில் அரிசி  கால் கப்

 

பால்  ஒரு லிட்டர்

 

பேரீச்சம்பழ சிரப்  அரை கப்

 

வெனிலா எசன்ஸ்  2 சொட்டு

 

பாதாம், முந்திரி, பிஸ்தா 

 

தேவையான அளவு

 

பேரீச்சம் பழத்துண்டுகள்  சிறிதளவு

 

செய்முறை:

 

மூங்கில் அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து தண்ணிர் இறுத்து மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும். குக்கரில் பாலை ஊற்றி சூடானதும், 2 மணி நேரம் ஊற வைத்து, உடைத்த மூங்கில் அரிசி சேர்த்து 4 விசில் வந்ததும் சிம்மில் 10 நிமிடம் வேகவைக்கவும். பிறகு, மூடியைத் திறந்து பேரீச்சை சிரப் சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகவைக்கவும். எல்லாம் வெந்து ஒன்று சேர்ந்து வரும்போது முந்திரி, பிஸ்தா, பாதாம் சேர்த்துக் கலக்கவும். அடுப்பை அணைத்து விட்டு வெனிலா எசன்ஸ் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய பேரீச்சைத் துண்டுகளைத் தூவிப் பரிமாறவும்.

 

குறிப்பு:

 

பேரீச்சை சிரப் இல்லாதவர்கள், பேரீச்சம்பழத்தை விதை நீக்கி, ஊற வைத்து, அரைத்துச் சேர்க்கவும்.

No comments:

Post a Comment