அடை ஆம்லெட்
அடை ஆம்லெட்
தேவையானவை:
முட்டை - 5
கடலை மாவு - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறி மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
குடமிளகாய் - ஒன்றில் பாதி
சீஸ் - 2 டேபிள்ஸ்பூன் (துருவிக்கொள்ளவும்)
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். இத்துடன் கடலை மாவு, உப்பு, கறி மசாலாத்தூள், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். அடுப்பில் தவாவை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஊற்றவும். இதன் மீது வட்டமாக நறுக்கிய தக்காளி மற்றும் வெங்காயம் ஸ்லைஸ், குடமிளகாயை வைத்து வேகவிடவும். இறுதியாக துருவிய சீஸ், மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை தூவவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

No comments:
Post a Comment