பெப்பர் சிக்கன் கேப்சிகம் ஃப்ரை
பெப்பர் சிக்கன் கேப்சிகம் ஃப்ரை
தேவையானவை:
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடியளவு
எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
குடமிளகாய் - ஒன்று
(கியூப் வடிவில் நறுக்கவும்)
தாளிக்க :
எண்ணெய் - 3 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
சிக்கனை கழுவி சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, சிக்கன் துண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். சிக்கன் சுருண்டு வரும்போது உப்பு, மிளகுத்தூள், குடமிளகாய் சேர்த்து வதக்கி மூடி போட்டு வேக வைத்துப் பரிமாறவும்.

No comments:
Post a Comment