சுரைக்காய் தோசை
சுரைக்காய் தோசை
தேவையானவை:
இட்லி அரிசி அரை கிலோ
உளுந்து 200 கிராம்
சுரைக்காய் அரை கிலோ
காய்ந்த மிளகாய் 6
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
துருவிய தேங்காய் ஒரு கப்
பொடியாக நறுக்கிய
சின்னவெங்காயம் 50 கிராம்
செய்முறை:
இட்லி அரிசி, உளுந்தை தனித்தனியாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். சுரைக்காயை தோல்நீக்கித் துருவிக்கொள்ளவும். ஊறவைத்த அரிசியுடன் காய்ந்த மிளகாய், சேர்த்து அரைத்துக்கொள்ளவும். துருவிய சுரைக்காய், உப்பு, வெங்காயம், தேங்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கலக்கி தோசைகளாக வார்த்து எடுக்கவும்.

No comments:
Post a Comment