Saturday, 24 September 2016

முருங்கைக்கீரை அடை

முருங்கைக்கீரை அடை

முருங்கைக்கீரை அடை

 

தேவையானவை:

 

பச்சரிசி அரை கப்

 

புழுங்கலரிசி அரை கப்

 

உளுந்து கால் கப்

 

துவரம்பருப்பு அரை கப்

 

கடலைப்பருப்பு அரை கப்

 

பாசிப்பருப்பு அரை கப்

 

சிறுதானியம் (தினை, குதிரைவாலி, சாமை, வரகு) அரை கப்

 

முருங்கைக்கீரை ஒரு கப்

 

தேங்காய்த்துருவல் அரை கப்

 

காய்ந்த மிளகாய்  12

 

பெருங்காயம் கால் டீஸ்பூன்

 

உப்பு, எண்ணெய் தேவையான அளவு

 

செய்முறை:

 

இரண்டு வகை அரிசி, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை ஒன்றாகச் சேர்த்து 3 மணிநேரம் ஊற வைக்கவும். இத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன் பெருங்காயம், உப்பு, முருங்கைக்கீரை, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் மாவை ஊற்றி, அடைகளாக வார்த்து சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

No comments:

Post a Comment