சர்க்கரைப் பொங்கல்
சர்க்கரைப் பொங்கல்
தேவையானவை:
பச்சரிசி - 200 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
வெல்லம் - 250 கிராம்
ஏலக்காய் - 2 (பொடித்தது)
முந்திரி - 10
உலர் திராட்சை (கிஸ்மிஸ்) - 10
நெய் - 7 டீஸ்பூன்
செய்முறை:
அரிசியைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பாசிப்பருப்பை வெறும் வாணலியில் பச்சை வாசனை போகும் வரை வறுத்துக்கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, வறுத்த பாசிப்பருப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும். இத்துடன் அரிசியைச் சேர்த்து 800 மில்லி தண்ணீர் ஊற்றி, 4 விசில் வரும் வரை வேகவைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். வெந்த பச்சரிசியை அடுப்பில் வைத்து, வடிகட்டிய வெல்லப்பாகை இத்துடன் சேர்த்து அரிசி உடைந்துவிடாமல் மெதுவாகக் கிளறவும். சூடான நெய்யில் முந்திரி, ஏலக்காய், உலர் திராட்சை (கிஸ்மிஸ்) ஆகியவற்றை வறுத்து பொங்கலில் சேர்த்தால், சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்.

No comments:
Post a Comment