க்ரீம் ஆஃப் சிக்கன் சூப்
க்ரீம் ஆஃப் சிக்கன் சூப்
தேவையானவை:
சிக்கன் ஸ்டாக் - ஒரு லிட்டர்
சிக்கன் துண்டுகள் (வேக வைத்து சிறிதாக நறுக்கியது) - 50 கிராம்
மைதா மாவு - 20 கிராம்
வெண்ணெய் - 20 கிராம்
பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 30 கிராம்
செலரி (பொடியாக நறுக்கியது) - 15 கிராம்
பால் - 300 மில்லி லிட்டர்
ஃப்ரெஷ் க்ரீம் - 25 கிராம்
வெள்ளை மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தை வைத்து, வெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இதில் வெங்காயம் மற்றும் செலரியை சேர்த்து வதக்கவும். பின்பு அதில் மைதா மாவு சேர்த்து அடிப்பிடிக்காமல் நன்கு கிளறவும். மாவு வெந்தவுடன், அடுப்பை அணைத்து விடவும். பின்னர், அதில் சிக்கன் ஸ்டாக்கை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டிகள் விழாதவாறு நன்கு கிளறி, அடுப்பில் தீயைக் குறைத்து, 10 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு இறக்கவும். சூடு ஆறியதும் இதை வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, நன்றாக காய்ச்சிக் கொள்ளவும். வடிகட்டி வைத்திருக்கும் கலவையை வேறு பாத்திரத்தில் ஊற்றி, காய்ச்சிய பாலையும் சேர்த்துக் கொதிக்க விடவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பும், மிளகுத்தூளையும் சேர்க்கவும். வேகவைத்த சிக்கன் துண்டுகள் சேர்த்து சூடாகப் பரிமாறவும். சிறிதளவு ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறலாம்.

No comments:
Post a Comment