Wednesday, 28 September 2016

சிக்கன் கிளியர் சூப்

சிக்கன் கிளியர் சூப்

சிக்கன் கிளியர் சூப்

 

தேவையானவை:

 சிக்கன் ஸ்டாக் - ஒரு லிட்டர்

 சிக்கன் துண்டுகள் (ஸ்டாக்கில் பயன்படுத்திய சிக்கன்) - 100 கிராம்

 உப்பு - தேவையான அளவு

 வெள்ளை மிளகுத்தூள் - தேவையான அளவு

 சோயா சாஸ் - கால் டீஸ்பூன்

 வெங்காயத்தாள் (பொடியாக நறுக்கியது) - 20 கிராம்

 

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து, சிக்கன் ஸ்டாக்கை ஊற்றி நன்கு சூடுபடுத்தவும். பிறகு, தேவையான அளவு உப்பு, வெள்ளை மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்துக் கொதிக்கவிடவும். பின்னர், வெந்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்க விடவும். பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளைத் தூவி சூடாகப் பரிமாறவும்.

No comments:

Post a Comment