வாழைத்தண்டு சூப்
வாழைத்தண்டு சூப்
தேவையானவை:
வாழைத்தண்டு - கால் கிலோ
ஸ்வீட் கார்ன் (உதிர்த்தது)- 125 கிராம்
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
வெள்ளை மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - அரை லிட்டர்
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
நறுக்கிய புதினா இலை - சிறிதளவு
செய்முறை:
வாழைத்தண்டை நார் இல்லாத வகையில் பொடியாக நறுக்கி, சுத்தம் செய்துகொள்ளவும். குக்கரில் கால் லிட்டர் தண்ணீரை ஊற்றி நறுக்கிய வாழைத்தண்டு, ஸ்வீட் கார்ன், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். கலவை ஆறியதும், மிக்ஸியில் மைய அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும், வடிகட்டி சேகரித்த சாற்றை ஊற்றி வேகவிடவும். இதனுடன் உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு, இறக்கவும். இறக்கிய கலவையுடன் எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லித்தழை மற்றும் புதினா இலைகளைச் சேர்த்துக் கலந்து வாழைத்தண்டு சூப்பை சூடாகப் பரிமாறவும்.

No comments:
Post a Comment