Monday 26 September 2016

ஆற்காடு மக்கன் பேடா

ஆற்காடு மக்கன் பேடா

ஆற்காடு மக்கன் பேடா

 

தேவையானவை:

 வனஸ்பதி - ஒரு டேபிள்ஸ்பூன்

 சமையல் சோடா - கால் டீஸ்பூன்

 மைதா மாவு - கால் கிலோ

 தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்

 சர்க்கரை இல்லாத கோவா - கால் கிலோ

 சர்க்கரை - கால் கிலோ ( பாகு தயாரித்துக்கொள்ளவும் )

 எண்ணெய் - தேவையான அளவு

 பாதாம் பருப்பு, வெள்ளரி விதை, சாரப்பருப்பு - தலா 10 கிராம்

 

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து வனஸ்பதியை ஊற்றி உருக்கவும். இத்துடன் சமையல் சோடா, மைதா மாவு, கோவா, தயிர், சர்க்கரை இல்லாத கோவா கலந்து குளோப்ஜாமுன் மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும் .பிசைந்த மாவை சிறிது சிறிதாக உருட்டி, இதில் ஒரு சிறு குழி போன்று செய்து இதன் உள்ளே பாதாம் பருப்பு , வெள்ளரி விதை , சாரப்பருப்பு மூன்றையும் வைத்து மூடி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் ஊற வைத்து எடுத்துப் பரிமாறவும்.

No comments:

Post a Comment