Saturday, 24 September 2016

கோல்பப்டி

கோல்பப்டி

கோல்பப்டி

 

தேவையானவை:

 

கோதுமை மாவு  அரை கப்

 

பொடித்த வெல்லம்  கால் கப்

 

கசகசா  அரை டீஸ்பூன்

 

ஏலக்காய்த்தூள்  கால் டீஸ்பூன்

 

நெய்  தேவையான அளவு

 

செய்முறை:

 

நெய் தடவிய தட்டில் கசகசாவைத் தூவி வைக்கவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி சூடானதும், கோதுமை மாவைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கவும். இத்துடன் பொடித்த வெல்லம் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். வெல்லம், கோதுமை மாவின் சூட்டில் உருகியதும், மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு நிமிடம் கிளறி இறக்கவும். இதனை நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்படுத்தவும். சூடு ஆறும் முன்பு துண்டுகள் போட்டு ஆறியதும் எடுத்துப் பரிமாறவும்.

No comments:

Post a Comment