Tuesday, 27 September 2016

மஷ்ரூம் மசாலா சாண்ட்விச்

மஷ்ரூம் மசாலா சாண்ட்விச்

மஷ்ரூம் மசாலா சாண்ட்விச்

 

தேவையானவை:

 மொட்டுக் காளான் - 200 கிராம்

 பிரெட் - ஒரு பாக்கெட்

 பெரிய வெங்காயம் - 100 கிராம்

 குடமிளகாய் - 1

 இஞ்சி - ஒரு சிறிய துண்டு

 பூண்டு - 3 பல்

 வெண்ணெய் - 50 கிராம்

 சீஸ் - 6 ஸ்லைஸ்கள்

 வெங்காயத்தாள் - ஒரு கட்டு

 மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

 தக்காளி சாஸ் - 15 மில்லி

 சிவப்பு மிளகாய் சாஸ் - 10 மில்லி

 பச்சைமிளகாய் சாஸ் - 10 மில்லி

 உப்பு - தேவையான அளவு

 எண்ணெய் - சிறிதளவு

 

செய்முறை:

காளானை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து, சன்னமாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பெருக்கல் குறி போல நறுக்கினால், சரிசமமான 4 துண்டுகள் கிடைக்கும்.  குடமிளகாயை சிறிய சதுரமாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காயத்தாளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு, பிரெட் ஸ்லைஸ்களை வெண்ணெய் தடவி தோசைக்கல்லில் சுட்டெடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, வெங்காயம், குடமிளகாய், இஞ்சி, பூண்டு, காளான், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, பிறகு இத்துடன் தக்காளி சாஸ், சிவப்புமிளகாய் சாஸ், பச்சைமிளகாய் சாஸ், மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்தக் கலவையில் நறுக்கிய வெங்காயத்தாளைத் தூவி விடவும். இந்தக் கலவையை, பிரெட் ஸ்லைகளின் மேல் பரவ விட்டு இதன் மீது சீஸ் வைத்து மற்றொரு பிரெட் ஸ்லைஸால் மூடவும். பரிமாறும் முன்பு பிரெட்களை குறுக்குவாக்கில் நறுக்கிப் பரிமாறினால் கடைகளில் விற்கும் சாண்ட்விச் போலவே இருக்கும்..

 

குறிப்பு:

தேவைப்பட்டால் பரிமாறும் முன் மஷ்ரூம் மசாலா சாண்ட்விச் உள்ளே இருக்கும் கலவை மற்றும் ரொட்டித்துண்டுகள் சரியாக ஒட்டுவதற்கு அதன் மேல் ஒரு 'டூத் பிக்' ஒன்றைக் குத்திப் பரிமாறவும்.

No comments:

Post a Comment