சிக்கன் ஸ்டாக்
தேவையானவை:
எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகள் - 150 கிராம்
கேரட் - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 50 கிராம்
செலரி - 50 கிராம்
தண்ணீர் - ஒன்றரை லிட்டர்
இடித்து வைத்துள்ள பூண்டு - 4 பல்
மிளகு - 5 கிராம்
செய்முறை:
கேரட், வெங்காயம், செலரி ஆகியவற்றை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். சிக்கனை நன்கு கழுவி, சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள், பூண்டு, சிக்கன், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். லேசாக கொதிக்க ஆரம்பித்தவுடன், தீயைக் குறைத்து வைத்து ஒரு மணி நேரம் கழித்து இறக்கி, வடிகட்டினால், சிக்கன் ஸ்டாக் தயார்.
குறிப்பு:
ஸ்டாக் செய்யும் போது, மேலே திரண்டு வரும் ஆடைகளை (ஏடுகளை)கரண்டியால் மெதுவாக எடுத்து விடவும். இதில் வெந்த சிக்கன் துண்டுகளை சூப்பில் சேர்த்து பரிமாறவும்.
No comments:
Post a Comment