Wednesday, 28 September 2016

ஹாட் அண்டு சோர் சிக்கன் சூப்

ஹாட் அண்டு சோர் சிக்கன் சூப்

ஹாட் அண்டு சோர் சிக்கன் சூப்

 

தேவையானவை:

 சிக்கன் ஸ்டாக் - ஒரு லிட்டர்

 கேரட் (நீளவாக்கில், மெல்லியதாக நறுக்கியது) - 50 கிராம்

 குடமிளகாய் - 50 கிராம்

 வெங்காயத்தாள் (நறுக்கியது) - 30 கிராம்

 வேகவைத்து சிறிய நீள துண்டுகளாக வெட்டிய சிக்கன் - 100 கிராம்

 சோயா சாஸ் - 5 மில்லி

 வினிகர் - 10 மில்லி

 சோள மாவு - 15 கிராம்

 உப்பு - தேவையான அளவு

 வெள்ளை மிளகுத்தூள் - தேவையான அளவு

 சில்லி ஆயில் - 10 மில்லி(10 கிராம் மிளகாய்த்தூளுடன், 15 மில்லி எண்ணெயை நன்கு சூடாக்கிச் சேர்த்து பத்து நிமிடங்கள் கழித்து, மேலே உள்ள தெளிந்த எண்ணெயை மட்டும் எடுத்தால் சில்லி ஆயில் ரெடி.)

 

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சிக்கன் ஸ்டாக்கை எடுத்துக் கொள்ளவும். அதில் கேரட் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும். பின்பு நீளமாக நறுக்கிய குடமிளகாய் மற்றும் சிக்கன் துண்டுகள் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். தேவையான அளவு உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து அதனுடன் சோயா சாஸ், சில்லி ஆயில், வினிகர் சேர்க்கவும். சோள மாவை சிறிதளவு நீரில் கரைத்து சூப்புடன் சேர்த்து நன்கு கலக்கி ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். சூப்பின் மீது, வெங்காயத்தாள் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

 

குறிப்பு:

தேவைப்பட்டால், பட்டாணியுடன் - 25 கிராம், பீன்ஸ் - 25 கிராம்,

முட்டைகோஸ் - 25 கிராம் ஆகியவற்றையும் சேர்க்கலாம்.

 

No comments:

Post a Comment