Wednesday, 28 September 2016

சிக்கன் நூடுல்ஸ் சூப்

சிக்கன் நூடுல்ஸ் சூப்

சிக்கன் நூடுல்ஸ் சூப்

 

தேவையானவை:

 சிக்கன் துண்டுகள் (வேகவைத்து சிறிதாக நறுக்கியது) - 100 கிராம்

 சிக்கன் ஸ்டாக் - ஒரு லிட்டர்

 நூடுல்ஸ் - 50 கிராம்

 கேரட் - 100 கிராம்

 பீன்ஸ் - 50 கிராம்

 முட்டைகோஸ் - 100 கிராம்

 வெங்காயத்தாள் - 30 கிராம்

 சோயா சாஸ் - கால் டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 வெள்ளை மிளகுத்தூள் - தேவையான அளவு

 

செய்முறை:

நூடுல்ஸை வேகவைத்து வடிகட்டிக் கொள்ளவும். கேரட், பீன்ஸ் மற்றும் முட்டைகோஸ் ஆகியவற்றை மெல்லியதான நீளத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சிக்கன் ஸ்டாக்கை ஊற்றி சூடாக்கவும். பின்னர், அதில் சிக்கனையும், நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளையும் சேர்த்து வேக வைக்கவும். பிறகு, அதில் உப்பு, வெள்ளை மிளகுத்தூள், சோயா சாஸ் ஆகியவற்றைச் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு, அடுப்பைக் குறைத்து வேகவிடவும். பின்பு, வேகவைத்த நூடுல்ஸை சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு இறக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து, சூப்பை சூடாகப் பரிமாறவும்.

No comments:

Post a Comment