Sunday, 25 September 2016

சேமியா பிரியாணி

சேமியா பிரியாணி

சேமியா பிரியாணி

 

தேவையானவை:

சேமியா - 200 கிராம்

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று

இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

பச்சைமிளகாய் - 2

கேரட் - 1

பீன்ஸ் - 3

காலிஃபிளவர் - ஒரு கைப்பிடியளவு

தக்காளி - 3

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

புதினா இலை - சிறிதளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

நெய் - 4 டீஸ்பூன்

 

தாளிக்க:

எண்ணெய் - 2  டேபிள்ஸ்பூன்

சீரகம் - முக்கால் டீஸ்பூன்

பட்டை - ஒரு துண்டு

கிராம்பு - 2

ஏலக்காய் - ஒன்று

பிரிஞ்சி இலை – ஒன்று

 

செய்முறை:

சேமியாவை உதிரி உதிரியாக வேக வைத்துக்கொள்ளவும். தக்காளியை பேஸ்ட் போல அரைத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் காலிஃபிளவர் பூக்கள் சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும். இத்துடன் தக்காளி பேஸ்ட்டை ஊற்றி, காய்களை மிதமான தீயில் வேக விடவும். பிறகு மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு வெந்த சேமியாவைச் சேர்த்து பதமாக கிளறி, கொத்தமல்லித்தழை, புதினா இலை தூவி, இறுதியாக நெய் ஊற்றிக் கிளறி, பத்து நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment