புதினா-கொத்தமல்லித்தழை பக்கோடா
புதினா-கொத்தமல்லித்தழை பக்கோடா
தேவையானவை:
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 20
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
புதினா இலை - 25 கிராம்
கொத்தமல்லித்தழை - 50 கிராம்
வெண்ணெய் - 25 கிராம்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், பச்சைமிளகாய், புதினா, கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். எண்ணெய், வெண்ணெய் தவிர்த்து மற்ற எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாக பிசைந்து வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில், சூடான எண்ணெய், வெண்ணெய் ஊற்றி சூடானதும், தயாராக பிசைந்து வைத்துள்ள மாவைக் கிள்ளி எடுத்துப் போட்டு பொரிக்கவும். பக்கோடா, பொன்னிறமாக வந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

No comments:
Post a Comment