Tuesday, 27 September 2016

தால் பாலக்

தால் பாலக்

தால் பாலக்

 

தேவையானவை:

 வெண்ணெய் - 25 கிராம்

 சீரகம் - ஒரு டீஸ்பூன்

 பெரிய வெங்காயம் - ஒன்று

 தக்காளி - ஒன்று

 இஞ்சி - ஒரு டீஸ்பூன்

 பூண்டு - ஒரு டீஸ்பூன்

 பச்சை மிளகாய் - இரண்டு

 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

 சீரகத்தூள் - கால் டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 பாசிப்பருப்பு - 25 கிராம்

 பாலக்கீரை - 100 கிராம்

 

செய்முறை :

பாசிப்பருப்பை வேக வைத்துக்கொள்ளவும், பாலக்கீரையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய் ஊற்றி உருகியதும், சீரகம் சேர்த்துப் பொரியவிடவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் சுத்தம் செய்த பாலக்கீரை சேர்த்து மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வேகவைத்த பாசிப்பருப்பையும் சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment