Sunday 25 September 2016

கதம்பப் பொரியல்

கதம்பப் பொரியல்

கதம்பப் பொரியல்

 

தேவையானவை:

 பாசிப்பருப்பு - 6 டீஸ்பூன்

 பொடியாக நறுக்கிய கேரட் - 4

 பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 50 கிராம்

 பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - 200 கிராம்

 உப்பு - தேவையான அளவு

 தேங்காய்த்துருவல் - 50 கிராம்

 

தாளிக்க:

 எண்ணெய் - 2 டீஸ்பூன்

 கடுகு - கால் டீஸ்பூன்

 உளுந்து - கால் டீஸ்பூன்

 காய்ந்த மிளகாய் - 2

 பெருங்காயத்தூள் - சிறிதளவு

 கறிவேப்பிலை - சிறிதளவு

 

செய்முறை:

பாசிப்பருப்பை 20 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவும். ஊறிய பாசிப்பருப்புடன் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். வேகவைத்த காய்களை இத்துடன் சேர்த்து வதக்கவும். காய்களில் உள்ள ஈரத்தன்மை குறைந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment