Monday, 26 September 2016

ஆனியன் சாதம்

ஆனியன் சாதம்

ஆனியன் சாதம்

 

தேவையானவை:

 சாதம் - 200 கிராம்

 பெரிய வெங்காயம் - ஒன்று

 பச்சைமிளகாய் - ஒன்று

 பூண்டு - ஒன்று டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

 மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு

 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)

 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 கடுகு - அரை டீஸ்பூன்

 

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கிலும், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, பூண்டு இவற்றைப் பொடியாகவும் நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை வதக்கவும். இதில் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். இத்துடன் சாதத்தைச் சேர்த்து நன்கு கலக்கவும். நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழையை சாதத்தின் மேல் தூவிவிடவும்.

 

குறிப்பு:

ஆனியன் சாதத்துடன் கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, முட்டைகோஸ் போன்றவற்றைச் சேர்த்தால் வெஜிடபிள் சாதம் தயார். கீரையைச் சேர்த்தால் கீரை சாதம் தயார். அருமையான ஆரோக்கிய உணவு இது.

No comments:

Post a Comment