Saturday 24 September 2016

இறால் மிளகு வறுவல்

இறால் மிளகு வறுவல்

இறால் மிளகு வறுவல்

 

தேவையானவை:

 

இறால்  கால் கிலோ (சுத்தம் செய்தது)

 

பூண்டு  6 பல் (பொடியாக நறுக்கியது)

 

மிளகு  15

 

கறிவேப்பிலை  சிறிதளவு

 

பச்சை மிளகாய்  3

 

உப்பு  தேவையான அளவு

 

தேங்காய் எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்

 

சீரகத்தூள்  அரை டீஸ்பூன்

 

மஞ்சள் தூள்  அரை டீஸ்பூன்

 

செய்முறை:

 

இறாலை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு நன்கு அலசி விட்டு சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்தும் பிசிறி, அரை மணி நேரம் ஊற விடவும். பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் ஊற வைத்த இறால் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தீயைக் குறைத்து வதக்கி, மூடி போட்டு வேகவிடவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. இறாலில் இருந்து வெளிவரும் தண்ணீரே போதுமானது. இறால் நன்கு வெந்ததும், மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்து தூவி நன்கு புரட்டி இரண்டு நிமிடம் விட்டு இறக்கவும்.

No comments:

Post a Comment