Sunday 25 September 2016

பருப்பு ரசம்

பருப்பு ரசம்

பருப்பு ரசம்

 

தேவையானவை:

 துவரம்பருப்பு - 25 கிராம்

 தக்காளி - 2

 பூண்டு - 7 பல்

 ரசப்பொடி - 2 டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 எண்ணெய் - தேவையான அளவு

 கடுகு - சிறிதளவு

 கறிவேப்பிலை - சிறிதளவு

 எலுமிச்சை - ஒன்று (சிறியது)

 எண்ணெய் - தேவையான அளவு

 கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 

செய்முறை:

பருப்பை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். இத்துடன் இரண்டாக நறுக்கிய தக்காளி, கொத்தமல்லித்தழை, தட்டிய பூண்டு, ரசப்பொடி, உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கலந்து வைத்துள்ள கலவையைச் சேர்க்கவும். பிறகு எலுமிச்சைச்சாறு ஊற்றி 2 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment